search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக கூட்டணி இல்லை"

    பாஜக கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று குமாரசாமி நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Kumaraswamy #KarnatakaAssemblyelection

    பெங்களூர்:

    கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள பா.ஜனதாவும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி காங்கிரசுடன் இணைந்தும் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளன.

    இந்த நிலையில் பெங்களூரில் இன்று மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் குழு தலைவராக குமாரசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த கூட்டத்துக்கு முன்னதாக குமாரசாமி நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என நாங்கள் முடிவு செய்து விட்டோம். இதன் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. இந்த முடிவை மாற்றுவது குறித்த கேள்விக்கே இடமில்லை.

    பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை. அந்த கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #KarnatakaAssemblyelection

    ×